ருஹூணு பல்கலைக்கழக மாணவர்கள் இடையே திடீர் மோதல்
ருஹூணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே இன்று மாலை திடீர் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று(20) மாலை இடம்பெற்றுள்ளது.
நேற்று(19) நடைபெற்ற கிரிக்கட் போட்டியொன்றின் ஓட்ட எண்ணிக்கை பதிவு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்று குறித்த மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சிகிச்சை
இதன் காரணமாக ஆறு மாணவர்கள் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் ருஹூணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
அத்தோடு குறித்த மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையே மோதலில் ஈடுபட்ட இருதரப்பு மாணவர்கள் தற்போது கம்புறுப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பொலிசாரின் மத்தியஸ்தத்தில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




