சாய்ந்தமருது கடைகளில் திடீர் சோதனை
சாய்ந்தமருது (Sainthamaruthu) பிரதேச சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், பல்பொருள் விற்பனை நிலையங்கள் போன்றவற்றில் திடீர் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கை நேற்றைய தினம் (20.04.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தலைமையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாவனைக்குதவாத உணவுகள்
இதன்போது சாய்ந்தமருதின் பிரபல கடைகளில் பாவனைக்கு பொருத்தமற்ற பழுதடைந்த தானியங்கள், வண்டுகள் மற்றும் புழுக்கள் நிறைந்த உணவுகள், மனித பாவனைக்குதவாத உலருணவுகள், மனித ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள், முறையான களஞ்சிய வசதிகளின்றி வைக்கப்பட்டுள்ள உணவுப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.







டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri