மருதமுனை பகுதியில் திடீர் சோதனை - 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அம்பாறை - கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கையின் போது 12 மோட்டார்சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திடீர் சோதனை நடவடிக்கையானது நேற்று மாலை பெரிய நீலாவணைக்கட்பட்ட மருதமுனை மற்றும் கடற்கரை வீதி போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீதி ஒழுங்குமுறை
இத்திடீர் சோதனையில் மோட்டார்சைக்கிள் ஆவணம், காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார்சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.











நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் மாலை - திருவிழா





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 14 மணி நேரம் முன்

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
