யாழில் திடீர் சோதனை நடவடிக்கை : அறுவர் கைது
யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேர் இன்றையதினம்(24.10.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறு பேரிடமிருந்தும் எழு கிராம் ஹெரோயின் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
போதைப்பொருள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரப்படும் நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாரின் இன்றைய திடீர் சோதனையின் போது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஒரு சந்தேக நபரிடம் இருந்து மூன்று கிராம் ஹெரோயினும் ஐந்து பேரிடம் இருந்து வெவ்வேறாக நான்கு கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
பற்றி எரியும் எண்ணெய் முனையம்- அமீரகத்தின் முக்கிய துறைமுகத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri