பிரான்சிலிருந்து இலங்கை வந்தடைந்துள்ள 250 இளம் பெண்கள்! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் வரவேற்பு
உலகில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் "Raid Amazones" விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 250 இளம் பெண் விளையாட்டு வீரர்கள் அடங்கிய முதல் குழு 03/20 காலை பாரிஸில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த போட்டியை 03/20 முதல் 03/28 வரை கண்டி பிரதேசத்தில் பல கட்டங்களின் கீழ் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்பாட்டுக் குழு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விளையாட்டு போட்டியில் பங்குக்கொள்ளும் பெண்கள் குழு 03/20 அன்று காலை 05.15 மணியளவில் பிரான்சின் பாரிஸில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-564 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இவர்களை வரவேற்க இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் குழு ஒன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வருகை தந்து வரவேற்றுள்ளது.


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
