மன்னிக்க கற்றுக் கொடுத்தவர் எனது தந்தை: ராஜீவ்காந்தி தொடர்பில் ராகுல்காந்தி உருக்கம் (Video)
மன்னிக்கும் குணத்தை கற்று தந்தவர் ராஜீவ்காந்தி என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ராஜீவ்காந்தியின் மகன் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவொன்றை உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில், நவீன இந்தியாவை உருவாக்கத் தேவையான கொள்கைகளை கொண்ட தொலைநோக்கு பார்வை கொண்ட சிறந்த தலைவர் எனது தந்தை.
தந்தை ராஜீவ் காந்தி இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதராக திகழ்ந்தார்.
எனக்கும், எனது சகோதரி பிரியங்கா காந்திக்கும் மன்னிக்க கற்றுக் கொடுத்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
My father was a visionary leader whose policies helped shape modern India.
— Rahul Gandhi (@RahulGandhi) May 21, 2022
He was a compassionate & kind man, and a wonderful father to me and Priyanka, who taught us the value of forgiveness and empathy.
I dearly miss him and fondly remember the time we spent together. pic.twitter.com/jjiLl8BpMs
கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி மனித வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார் என்பதுடன், அவர் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri