சிறுபிள்ளைத்தனமான சேட்டை செய்யும் ராகுல் காந்தி: நரேந்திர மோடி பதிலடி
பள்ளி மாணவர் குறை கூறுவது போன்று ஒருவர், நேற்று இந்திய மக்களவையில் சிறுபிள்ளைத்தனமான சேட்டை செய்தார் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Prime Minister of India), எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை(Rahul Gandhi) மறைமுகமாக இன்று(02) விமர்சித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்திய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசியல் ஆதாயம்
சிறுபிள்ளைத்தனம் என கருதி பொய்மையை கவனிக்காமல் விட முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களவையில் நேற்று ராகுல் காந்தி பேசியதை மக்கள் 100 ஆண்டுகள் ஆனாலும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை ராகுல் காந்தி புண்படுத்திவிட்டார் என்று மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்துக்களை வன்முறையாளர்களாக காட்டுவதே காங்கிரஸின் கலாசாரமாகியுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு காரணமே இந்து மதம்தான் என்று குறிப்பிட்ட நரேந்திர மோடி,அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை காங்கிரஸ் அவமதித்து, கேலி செய்கிறது என்றும் குற்றம் சுமத்தினார்.
முன்னதாக நேற்று மக்களவையில் உரையாற்றிய ராகுல் காந்தி, பாரதீய ஜனதாக்கட்சியினர் உண்மையான இந்துக்கள் அல்லர் என்றும், அவர்கள் இந்துக்களின் பிரதிநிதிகள் அல்லர் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் பாரதீய ஜனதா இந்து மதத்தினரை வன்முறையாளர்களாக காட்டுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |