ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது
காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருதத்தினை வெளியிட்டதற்காக ராகுல் காந்திக்கு இரண்டு வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராகுல் காந்தியின் நாடாளுமன்ற பதவி தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தனர்.
பறிக்கப்பட்ட பதவி

எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் குற்ற வழக்குகளில் 2 அல்லது 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் அவர்களது பதவியை பறிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடம் உள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 8 (3)-ன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழப்பார்கள் என்று வகுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை உறுப்பினர் பதவி மற்றும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற பதவியையும் பறித்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam