தங்க மகன் -2026 விருதை தன்வசப்படுத்திக் கொண்ட இலங்கை ஊடகவியலாளர்
தமிழ் கலை மற்றும் பண்பாடு மற்றும் தமிழ் ஊடக துறைக்கு சிறப்பான பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்பான சேவைகளைப் பாராட்டி இலங்கையினை சேர்ந்த ஊடகவியலாளர் தேசமாணி இர்ஷாத் ரஹ்மத்துல்லாவுக்கு “தங்க மகன் -2026” விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் காஞ்சிபுரம், திருநீலகண்டர் திருமண மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வினை வராஹி கல்வியல் அறக்கட்டளை மற்றும் உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடம் வழங்கும் ஜாக்கி உலக சாதனை திறமைக்கான விருதுகள் வழங்கும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
விருது வழங்கள்
சேவை செம்மல் சேவரத்னா, உலகத்தமிழ் கலை பண்பாட்டு கூடத்தின் சர்வதேச தலைவர் எஸ். எம். ரஷ்மி ரூமி இந்த விருதினை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், சர்வதேச பொருளாளர் ஆர். பாண்டியன், அகில இந்திய துணை தலைவி ஜெயசுதா ஜெயபால், இயக்குனர் முனைவர் மீரான் ஜீ முஹம்மது, அகில் இந்திய தலைவர் டாக்டர் ரத்தினவேல், அகில இந்திய செயலாளர் Dr. பிரகாஷ், தென்னிந்திய மகளிர் அணி செயலாளர் திவ்யஸ்ரீ பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.