வைத்தியர்களுக்கு முகநூலில் அவதூறு : மன்னிப்புக் கோரிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர்
வைத்தியர்களுக்கு எதிராக முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட யாழ் - உரும்பிராயைச் சேர்ந்த நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவிற்கமைய முகநூலில் மன்னிப்பு கோரியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் - உரும்பிராயைச் சேர்ந்த ரகுராம் என்ற நபர் தன்னை ஒரு வைத்தியராக தெரிவித்து ஏனைய வைத்திய முறைகள் தொடர்பிலும் வைத்தியர்கள் தொடர்பிலும் முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் காணொளிகளை பதிவேற்றி வந்துள்ளார்.
நீதிமன்றில் வழக்கு
இந் நிலையில், குறித்த நபருக்கு எதிராக தற்போது சட்ட வைத்திய அதிகாரியினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இடம்பெற்றுள்ளது.
மேலும், வழக்கு விசாரணையின் பின் குறித்த நபரை மன்னிப்பு கேட்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




