இஸ்ரேலின் தாக்குதலில் அதிர்ந்த ரஃபா நகரம்: ஆறு குழந்தைகள் உட்பட 9 பேர் பலி
இஸ்ரேல்(Israel) இராணுவத்தால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக ரஃபா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட 9 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதல் ரஃபாவின் அருகில் உள்ள டெல் சுல்தான் நகரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொலைசெய்யப்பட்ட ஆறு குழந்தைகள், இரண்டு பெண்கள், ஒரு ஆண் ஆகியோரின் உடல்கள் ரஃபாவில் உள்ள அபு யூசெப் அல்-நஜ்ஜர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொடூர தாக்குதல்
காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், காசாவின் வடக்குப்பகுதியை ஏறக்குறைய உருக்குலைத்துவிட்டது என பலஸ்தீன தரப்பு கவலை வெளியிட்டுள்ளது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரும் இஸ்ரேல் இராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானது.
இதன்படி தங்களது இலக்கு முடிந்து விட்டதால் இந்த நகரில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருந்தது.
மேலும், ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போரின் நோக்கம் நிறைவேற ரஃபா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam