கட்சிகளை உடைக்கும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் : இராதாகிருஷ்ணன்
கட்சிகளை உடைப்பதற்கான எதிர்பார்ப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இருக்கின்றார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன்(Radhakrishnan) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (04.04.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரப் பிரச்சினை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டிலே பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக இரண்டு தேர்தலுக்கு செலவழிக்கின்ற செலவை குறைக்கும் நடவடிக்கை எடுக்க முடியும் அந்த வகையிலே இந்த தேர்தல் இரண்டையும் ஒன்றாக வைத்தால் செலவை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
அதே நேரத்தில் கட்சிகளுக்கு இடையிலே பலவிதமான குழப்பங்கள் நிலவுகின்ற காரணத்தினால் எந்த கட்சியில் இருந்து வாக்கு கேட்பது? எவ்வாறு உடைத்துக் கொண்டு செல்வது? யாரை உடைக்கலாம்? என்ற எதிர்பார்ப்புகளோடு இருக்கின்ற கட்சிகளுக்கு இது ஒரு சிக்கலாக அமையும்.

ஏனென்றால் ஜனாதிபதி ஒருவர் வந்த பிறகுதான், அடுத்து ஜனாதிபதியின் கட்சி வருவது மரபாக உள்ளது. அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு வருகின்ற தலைவர் அதிகாரத்தை கைப்பற்றுகின்ற மரபு இங்கு இருக்கின்றது.
எனினும் இந்த தேர்தல்களை ஒன்றாக வைத்தால் இந்த சிக்கல் வரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவதற்கான எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அவர் எல்லா கட்சிகளையும் உடைத்து அவற்றை எடுப்பதற்கான வசதிகள் என்னவென அவர் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

இவ்வாறான சூழ்நிலையில் அவரது கட்சியை உடைக்கின்ற விடயம் சாத்தியமற்றது” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam