பூண்டுலோயா தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்த இராதாகிருஷ்ணன்
நுவரெலியா (Nuwaraeliya) மாவட்டம் பூண்டுலோயா சீன் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் (V.S. Radhakrishnan) சந்தித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டம் பூண்டுலோயா சீன் பகுதியில் கடந்த 16ஆம் திகதி 12 வீடுகளை கொண்ட லயன் குடியிருப்பொன்று தீக்கரையாகியது.
தீப்பரவலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தோட்ட ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இராதாகிருஷ்ணனின் உதவி
அந்தக் குடும்பங்ளை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி உடை, உணவு பொருட்கள், பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை வேலுசாமி இராதாகிருஷ்ணன் கையளித்துள்ளார்.
இதன்போது, மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் மற்றும் நிர்வாக செயலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |