பெருந்தோட்ட தொழிலாளர்கள் விடயத்தில் அரசாங்கத்தின் நாடகம் - ராதாகிருஷ்ணன் கண்டனம்
காலங்காலமாக இழுத்தடிப்பு செய்யப்பட்ட தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனை தற்போதும் ஏமாற்றப்பட்ட ஒன்றாக மாறிவிட்டதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் (V.S. Radhakrishnan) தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று (05.07.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
“அண்மையில் கொட்டகலையில் இடம்பெற்ற மேதின நிகழ்வின் போது, ஜனாதிபதி மற்றும் தொழில் அமைச்சர் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் கிடைத்துள்ளதாகவும் அதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மன வருத்தம்
எனினும், அரசாங்க தோட்டத்தில் எல்கடுவ பிளான்டேஷனில் சம்பளம் வழங்கியது போல சூழ்ச்சி செய்து முழு பெருந்தோட்ட மக்களையும் நம்ப வைத்து தற்போது ஏமாற்றியுள்ளனர்.
ஆனால், தற்போது கம்பனிகள் உயர் நீதிமன்றத்திற்கு சென்று இடைக்கால தடையுத்தரவை வாங்கியிருக்கின்றமை மலையகத்தை பிரதிநிதித்துவப்படும் பிரதிநிகள் என்ற வகையில் மன வருத்தம் அடைகிறேன்.
நிலையான முடிவு
இனியாவது பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பள விடயத்தில் தன்னிச்சையாக செயற்பாடாமல் அனைவரையும் இணைத்துக்கொண்டு கம்பனிகளுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை உருவாக்கப்பட வேண்டும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு அரசாங்கம் ஒரு நிலையான முடிவெடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மலைபோல் குவிந்துள்ள சொத்தில் 1 சதவீதம் மட்டுமே பிள்ளைகளுக்கு... பில்கேட்ஸ் கூறும் காரணம் News Lankasri
