இனவாதிகள் இந்த முகநூல் தளத்திற்குள் இனி வர வேண்டாம்! மனோ கணேசன் ஆதங்கம்
“இது தமிழ், முஸ்லிம், சிங்கள இனப்பிரச்சினை அல்ல. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அரசியல் பிரச்சினையும் அல்ல. இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை." என்று எனது உரையில் நான் இரண்டு முறை அழுத்தம் திருத்தமாக கூறுகின்றேன்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“குற்றம் நிகழ்ந்து இருந்தால், நிகழ்ந்து இருந்தால், குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்" எனவும் கூறுகிறேன்.
"ரிஷாத் பதுர்தீன் மீது அரசியல் காரணங்களுக்காக நெருக்கடியை ஏற்படுத்தி அவரை இந்த அரசாங்கம் சிறையில் வைத்திருப்பதை நாமறிவேம். அவருக்காக நாம் எப்போதும் குரல் எழுப்புகிறோம்" என்றும் நான் கூறுகிறேன்.
"ஆனால் இச்சம்பவம், எம்பி ரிஷாத் பதுர்தீன் வீட்டில் நிகழ்ந்துள்ளதால், இதுபற்றி நாம் இப்படி பேசு வேண்டியுள்ளது.
எமது மக்களுக்காக நாம், குறிப்பாக தமுகூ தலைவர் என்ற முறையில் நான், குரல் எழுப்ப வேண்டியுள்ளது" எனவும் எனது உரையில் நான் கூறுகிறேன்.
இதைவிட பண்புடனும், பொறுப்புடனும் ஒரு கட்சி தலைவர் வேறு எப்படி பேச முடியும்? நாம் பேசாவிட்டால், குரலற்ற, எமது அப்பாவி மக்களை பற்றி யார் பேசுவது? நாட்டின் உயரிய சபையான இலங்கை பாராளுமன்றத்தில் பேசா விட்டால், நான் எங்கே சென்று பேசுவது?
இவற்றைக்கூட புரிந்துக் கொள்ள முடியாத இனவாதிகள் இனி எமது இந்த முகநூல் தளத்திற்கு வர வேண்டாம்.”

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
