திறமை இருந்தால் இனம் என்பது முக்கியமல்ல : கலகொட அத்தே ஞானசார தேரர்
திறமையானவர்களாக இருந்தால், தமிழரா, சிங்களவரா, முஸ்லிமா என்பது முக்கியமல்ல எனவும் திறமையானவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் ஒரு நாடு - ஒரு சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர்(Gnanasara Tero) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக கேந்திர நிலையத்தில் இன்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு அடுத்த நூற்றாண்டு மற்றும் அதற்கு அப்பாலும் செல்லுபடியாகும் ஒரு நாடு, ஒரு சட்டம், ஒரே நாட்டவர் என அனைவரையும் ஒரு கொடியின் கீழ் இணைக்கக் கூடிய எமக்கு பொருத்தமான சட்ட வரைவை உருவாக்குவதே தற்போது எமக்குள்ள பொறுப்பு.
நாட்டில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் விசேடமான சட்டம் இருக்க முடியாது. அதேபோல் ஒவ்வொரு பிரதேசத்திற்கு அமைய சட்டங்கள் மாறக் கூடாது.
நாங்கள் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எமது இறுதி முடிவை ஜனாதிபதியிடம் கையளிப்போம். நாட்டில் தற்போதுள்ள சட்டமானது பல தசாப்தங்களுக்கு முன்னர் சமூகத்தில் காணப்பட்ட தேவைக்கு அமைய உருவாக்கப்பட்டது.
ஏகாதிபத்தியவாதிகள் தமது நிர்வாகத்தை இலகுவாக முன்னெடுக்க இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் மன்னர்களால் அமுல்படுத்தப்பட்ட அரச சட்டமே நாட்டில் அமுலில் இருந்தது எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri