ராணியார் பாதுகாத்துவந்த புதையல் இனி வேல்ஸ் இளவரசிக்கு
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தற்போது ராணி இரண்டாம் எலிசபெத்தின் நகைகள் அனைத்தையும் சொந்தமாக வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
பரம்பரையாக கைமாறப்படும் ராணியாரின் நகைகள் மொத்தம், பகிர்ந்துகொண்டது போக, இனி வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு சொந்தம் என தகவல் வெளியாகியுள்ளது.
ராணியார் இரண்டாம் எலிசபெத் பாதுகாத்துவந்த அந்த புதையலானது பரம்பரை பரம்பரையாக கைமாறப்பட்டதாகும். தமது குடும்பத்தில் பலருக்கும், டயானா, மேகன் மெர்க்கல், கேட் மிடில்டன் என பலருக்கும் அதில் குறிப்பிட்ட நகைகளை பரிசாகவும் அளித்துள்ளார்.
முடிசூட்டும் நாளில் கிரீடத்தை அணியும் கேட் மிடில்டன்
அதில் சிறப்பு மிகுந்த நகை என்பது ராணியார் பொதுவாக முக்கிய நிகழ்வுகளில் அணிந்துகொள்ளும் வைரத்தாலான கிரீடமாகும். 23,578 வைர கற்களால் உருவாக்கப்பட்ட அந்த கிரீடத்தின் தற்போதைய மதிப்பு 800,000 பவுண்டுகள் என கூறப்படுகிறது.
குறித்த கிரீடமானது இதுவரை நான்கு ராணியார்களால் மட்டுமே அணியப்பட்டுள்ளது. அந்த கிரீடமானது தற்போது வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் வசம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள.
வேல்ஸ் இளவரசர் வில்லியம் பிரித்தானிய மன்னராக முடிசூட்டும் நாளில், கேட் மிடில்டன் அந்த கிரீடத்தை சூடிக்கொள்வார் என்றே நம்பப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த அந்த கிரீடம் 1820ல் மன்னர் நான்காவது ஜோர்ஜால் உருவாக்கப்பட்டுள்ளது, அதுவும் 8,216 பவுண்டுகள் மதிப்பில் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
