ரகசியமாக எடுத்துச்செல்லப்பட்ட ராணியின் கிரீடம்:இதுதான் காரணம்!
இங்கிலாந்தின் முடிசூட்டு மகுடமாக கருதப்படும் செயின்ட் எட்வர்ட் மகுடம் லண்டனில் உள்ள ராயல் அரண்மனையில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
கிரீடம் எடுக்கும் நடவடிக்கை ரகசியமாக முன்னெடுக்கப்பட்டதுடன், அது வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பான விபரம் வெளியிடப்பட மாட்டாது என இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதம் பகுதியில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக லண்டன் கோபுரத்தில் இருந்து அகற்றி கிரீடத்தை புதுப்பிக்கத் தொடங்கியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க கிரீடம்
வரலாற்று சிறப்புமிக்க கிரீடம் பிரித்தானிய அரச குடும்பத்தின் புதிய ராஜா அல்லது ராணி முடிசூட்டப்படும் போது அணியப்படும்.
இந்நிலையில் முடிசூட்டு மூன்றாம் சார்லஸ் மன்னரின் விழாவிற்கு ராணி அணிந்திருந்த கிரீடத்தை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
முடிசூட்டு விழாவிற்கு பிறகு, அது லண்டன் கோபுரத்தில் மீண்டும் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.