அனுமதியின்றி கல்குவாரியா..! போராட்டத்தில் குதித்த மக்கள்
அம்பாறை - திருக்கோவில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நேருபுரம் பகுதியில், எந்தவித அனுமதியுமின்றி அமைக்கப்பட்டுள்ள கல்குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, நேற்று முன்தினம்(22.04.2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள்
இதன்போது, திருக்கோவில் பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் இந்தக் கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமையைக் கேட்டறிந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் சு.சசிகுமார் மற்றும் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆராய்ந்துள்ளனர்.

மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்த அதிகாரிகள், குறித்த கல்குவாரியானது சட்டவிரோதமானது என்பதை உறுதிப்படுத்தியதுடன், அது உடனடியாக அங்கிருந்து அகற்றப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.
மக்களின் கோரிக்கை
இது தொடர்பாகத் தெளிவுபடுத்திய பிரதேச செயலாளர், "இந்த இடமானது குளத்துக்குச் சொந்தமான அரச காணி என்பதால், அங்கு எந்தவிதமான கட்டுமானங்களையும் முன்னெடுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையைத் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த கல்குவாரிக்கு எந்தவிதமான சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரமும் வழங்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறுதியில், இந்தக் கல்குவாரியால் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அதனை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.




அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! வாக்கெண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு