யாழில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு
யாழ்ப்பாணம்-கொடிகாமம் பகுதியில் வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்றைய தினம்(19) கொடிகாமம் பகுதியில் குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான முறையில் பை ஒன்று காணப்பட்டது.
இதனையடுத்து , கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பையை மீட்டு சோதனையிட்ட போது அவற்றுக்குள் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவை கோர்வைகள் காணப்பட்டுள்ளன.
அடுத்த கட்ட நடவடிக்கை
இந்தநிலையில், குறித்த பையை மீட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார் அவற்றுள் 1393 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும், அவற்றினை நீதிமன்றில் பாரப்படுத்தி நீதிமன்ற உத்தரவில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
