இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம்! மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம் தொடர்பில் ஆராய்வதற்கான முறைமை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தரமற்ற உணவுகளை உட்கொள்வதன் காரணமாக நுகர்வோர் இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிப்பு பண்டங்கள்
இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விசேட வைத்தியர் சுரந்த பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,''சந்தைக்குக் கொண்டு வரப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
தரமற்ற உணவு
தரமற்ற உணவுகளை உட்கொள்வதன் காரணமாக நுகர்வோர் இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இதுதவிர, உணவு ஒவ்வாமை, சுவாச நோய் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுக்கின்றனர்.
இல்லையெனில் அவற்றால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ள முடியாது'' என விசேட வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam