நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு: கியூ.ஆர். எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்
கியூ.ஆர். எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முனையங்களில் இவற்றை இறக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அச்சத்தில் திமுக - 41 வீதத்தில் ஆட்சியை பிடிக்கும் விஜய்..! தமிழக தலைவர்களின் திக்.. திக்.. நிமிடங்கள்
துறைமுக அதிகாரிகளின் தகவல்படி, முதலாவது கப்பலில் 20,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் 20,000 மெட்ரிக் டொன் டீசல் இரண்டாவது கப்பலில் 35,300 மெட்ரிக் டொன் பெட்ரோல் என்பனவற்றை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க முடியும்
மேலும், தலா 37,000 மெட்ரிக் டொன் டீசல் அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் இந்த மாத இறுதியில் வருகை தரவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய களஞ்சிய முனையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போதுள்ள கையிருப்பு மற்றும் திட்டமிடப்பட்ட இறக்குமதிகள் மூலம் எதிர்வரும் ஜூலை மாதம் வரை தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தகவல்கள் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சூழலில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதுமான அளவு விநியோகம் தொடர்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் கையிருப்பு நிலை சீராக உள்ளதால், தற்போது நடைமுறையிலுள்ள கியூ.ஆர். எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பிலும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam