எரிபொருள் நெருக்கடி: QR முறைமையின் தற்போதைய நிலை என்ன..! அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு
எரிபொருளுக்கான QR முறைமை தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பழைய QR குறியீடு
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு வாகனத்திற்கு முன்பு QR குறியீடு இருந்து, அதன் பதிவு எண் மாறாமல் இருக்கும் பட்சத்தில், அந்த QR குறியீட்டை எந்தப் பிரச்சினையுமின்றிப் பயன்படுத்தலாம்.
வாகனத்தின் பதிவு எண் மாறாமல் புதுப்பிக்கப்பட்ட சமயங்களில், புதிய QR குறியீட்டைப் பெறுவதற்குச் சிறிது காலம் தேவைப்பட்டது. புதிய வாகனங்களை வாங்கியவர்கள் தொடர்பான சிக்கல்கள் தற்போது முழுமையாகத் தீர்க்கப்பட்டு, அந்தச் செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

பிரச்சினை
மீதமுள்ள முக்கியப் பிரச்சினை, வாகனத்தின் உரிமையாளர் மாற்றம் தொடர்பானது. இதுபோன்ற சமயங்களில், முந்தைய உரிமையாளரின் QR குறியீட்டை அகற்றத் தவறியதால் பிரச்சினைகள் எழுந்துள்ளன. அந்தப் பிரச்சினையும் தற்போது தீர்க்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், ஒரு மணி நேரத்திற்குச் சுமார் 30,000 வாகனங்கள் இந்த அமைப்பில் பதிவு செய்யப்படுகின்றன, இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என குறிப்பிட்டுள்ளார்.
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam