கியூ.ஆர் அட்டை புதிய பதிவுகள் சேவை இடைநிறுத்தம்!
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான கியூ.ஆர் அட்டையின் புதிய பதிவுகள் சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடம்பெறாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
Due to planned Maintenance work by the Dept of Motor Traffic to its system, the Registrations to the National Fuel Pass QR system for new users will not be available for the next 48 hours. Existing registered users will have no impact in using the system. https://t.co/4GlE92B7me
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 5, 2022
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் சில திருத்தப்பணிகள் காரணமாக இந்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கியூ.ஆர் அட்டை முறைமையை ஏற்கனவே பயன்படுத்திவரும் பயனாளர்களுக்கு இந்த விடயம் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் எரிசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.