கட்டார் நிறுவனத்திடமிருந்து பெட்ரோலிய கொள்வனவு: அரசாங்கத்தின் அவசர நடவடிக்கை
கட்டார் அரசாங்கத்திற்கு சொந்தமான 'கட்டார் எனர்ஜி' நிறுவனத்திடம் இருந்து இரண்டு பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கு அரசாங்கம் அவசரமாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஏ. ராஜகருணா குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் காலத்தில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான எரிசக்தி நெருக்கடிகளையும் தடுக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள்
பெட்ரோலியப் பொருட்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்வதற்கு 'கட்டார் எனர்ஜி' நிறுவனத்துடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன.
'கட்டார் எனர்ஜி' ஒரு அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்பதால் அத்தகைய ஒப்பந்தத்தின் கீழ் எரிசக்தி கொள்முதல் சாத்தியமாகும் என ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன்(UAE) இதே போன்ற திட்டங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்நாட்டில் தனியார் நிறுவனங்கள் மட்டுமே பெட்ரோலிய விற்பனையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
