கத்தாரின் தீர்மானத்தினால்- உலக நாடுகளுக்கு நெருக்கடி
பல நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக அதிகாரபூர்வமாக கத்தார் சக்திவள நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இத்தாலி, பெல்ஜியம், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கான நீண்டகால எரிவாயு ஒப்பந்தங்களைப் பாதித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை ஆரம்பித்ததிலிருந்து உலக எரிசக்தி சந்தை நிலைகுலைந்துள்ளது.

ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களைக் குறிவைத்துள்ளன.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து நடைபெறும் மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால் விநியோகச் சங்கிலி முற்றிலுமாக முடங்கியுள்ளது.
கத்தாரின் ராஸ் லஃப்பான் எரிவாயு நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், நாட்டின் எல்.என்.ஜி ஏற்றுமதி திறனில் 17 சதவீதம் முடங்கியுள்ளது என கத்தார் சக்திவள தலைமை நிர்வாக அதிகாரி சாத் அல்-காபி தெரிவித்துள்ளார்.
இதனால் ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சேதமடைந்த நிலையங்களைச் சீரமைக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்பதால், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கான விநியோகம் நீண்ட காலத்திற்குப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச ஒப்பந்த விதிகளின் பிரகாரம் கத்தார் எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam