இலங்கை பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்
இலங்கையிலிருந்து பயணிப்போர் தொடர்பில் அமுலிலிருந்த பயணக் கட்டுப்பாடுகளைக் கட்டார் தளர்த்தியுள்ளது.
இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட இலங்கைப் பயணிகள், கட்டாருக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படுகின்றது. எதிர்வரும் 6ம் திகதி முதல் இந்தப் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது.
கட்டார் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்கள் இரண்டு நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலின் பின்னர் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறான பயணிகளுக்குக் கட்டாரில் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
கட்டாருக்குப் பிரவேசிக்க 72 மணித்தியாலங்களுக்குள் இந்தப் பயணிகள்பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட்டு அதில் எதிர்மறையான பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றிருக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri