இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த விவகாரத்தில் பின்வாங்கும் கட்டார்!
இஸ்ரேலுக்கும் - ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக தொடரும் பணியை கட்டார் இடைநிறுத்தியுள்ளது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான பேச்சுவார்த்தையை தொடரவேண்டுமானால் குறித்த இரு தரப்புகளும் முதலில் தாமாக முன்வரவேண்டும் எனவும், அதன் பின்னர் அதற்கான நகர்வுகள் ஆரம்பிக்கப்படும் எனவும், அந்த நாடு கூறியுள்ளது.
முன்னதாக கட்டாரில் ஹமாஸ் பிரதிநிதிகள் இருப்பதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருந்தது. இதன்போது காசாவில் போரை நிறுத்துவதற்கான புதிய திட்டங்களை பாலஸ்தீனிய குழு நிராகரிப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது
மத்தியஸ்தப் பேச்சுக்கள்
இந்நிலையில், மத்தியஸ்தப் பேச்சுக்களில் இருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்த கட்டார், தோஹாவில் உள்ள ஹமாஸின் அரசியல் அலுவலகம் இனி அதன் நோக்கத்தை நிறைவேற்றாது எனவும் பகிரங்கமாக அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மத்தியகிழக்கின் கொடூரமான இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தங்கள் விருப்பத்தையும் தீவிரத்தையும் கட்டார் காட்டி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில், 2012 ஆம் ஆண்டு தோஹாவில் ஹமாசுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது.
அமெரிக்காவின் கருத்து
இதன்படி தோஹாவில் உள்ள அதன் அரசியல் அலுவலகத்தை மூடுமாறு ஹமாஸிடம் கட்டார் கூறியதாகவும், இந்த செயற்பாடு அமெரிக்காவின் கருத்துக்கு அந்த நாடு உடன்பட்டதாகவும், பல செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த கூற்றுகளை ஹமாஸ் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |