இலங்கைக்கான விமான சேவைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் கட்டார் ஏர்வேஸ்
இலங்கை மற்றும் கட்டார் தலைநகர் டோஹாவுக்கு (Doha) இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கையை கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, தினசரி 5 முறை இயக்கப்படும் குறித்த விமான சேவைகளை ஆறாக அதிகரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது இந்த மாதம் 10ஆம் திகதி (10.07.2024) முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவை மேம்படுத்தல்
மேலும், போயிங் 787 விமானம் மூலம் பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் மேம்படுத்தப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டாரின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் ஊடாக மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்வதற்கான வசதிகளை வழங்கவுள்ளதாகவும் கட்டார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |