புத்தளத்தில் லொறி கட்டுப்பாட்டை இழந்து விபத்து - சாரதி படுகாயம்
புத்தளம் - மதுரங்குளி நகரில் கொள்கலன் லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று(08.05.2026) இடம்பெற்றுள்ளது.
அதிரடி திருப்பங்களுடன் தமிழகத்தில் உருவான பலமாக அரசியல் கூட்டணி! விஜய்யின் முடிவினால் நிலைகுலைந்துள்ள கட்சிகள்..!
சாரதி படுகாயம்
மதுரங்குளி நகரின் பிரதான பாடசாலையொன்றுக்கு முன்பாக பயணித்த கொள்கலன் லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றமையாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் லொறி, வீதியோரத்தில் இருந்த பேருந்து தரிப்பிடத்தில் மோதி முற்றாக சேதப்படுத்தியுள்ளது.

அத்துடன், அருகில் இருந்த வாகனம் ஒன்றும் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, படுகாயமடைந்த லொறியின் சாரதி புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam