கொழும்பு புறநகர் பகுதி ஒன்றில் பணத்திற்காக பறிக்கப்பட்ட உயிர்
கொழும்பு புறநகர் பகுதி ஒன்றில் பணத்திற்காக வயோதிப் பெண்ணொருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கொட்டாவ மாலம்பே வீதி இலக்கம் 720 இல் வசிக்கும் டொன லீலா அபேரத்ன என்ற 76 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
குறித்த வயோதிபப் பெண் வீட்டில் தனிமையிலிருந்த போது சந்தேக நபர் வீட்டுக்கு சென்று வயோதிபப் பெண்ணிடம் 10,000 ரூபா பணம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில், இவ்வளவு பெரிய தொகை இல்லை என்று வயோதிபப் பெண் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஆனைமடு, நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்பதுடன் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் மகளின் கணவருக்குச் சொந்தமான வியாபாரத்தில் தொழிலாளியாக பணியாற்றியவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
