விமர்சனங்களை தாண்டி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் விஞ்ஞாபனம்
தமிழ் சிவில் சமூகங்களும் தமிழ்த் தேசிய கட்சிகளும் இணைந்து தமிழ்ப் பொதுக் கட்டமைப்பை உருவாக்கி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக அரியநேத்திரனை களமிறக்கியுள்ளனர்.
அரியநேந்திரன் சுயேட்சையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதோடு நேற்றையதினம் (04.09.2024) அவரின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்பட்டது.
தமிழ்த் தேசிய அடிப்படையில் இருந்து பார்க்கின்ற போது, குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.
மேலும், அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மீது மிக அதிகளவான விமர்சனங்களையும் முன்வைக்க முடியாது.
எனினும், விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் பல கேள்விகளும் எழுகின்றன.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது இன்றைய பார்வைகள் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |