மேற்கு நாடுகள் மீது புடின் தாக்குதல் நடத்துவார்: உக்ரைனிய மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை
மேற்கு நாடுகள் மீது விளாடிமிர் புடின் தாக்குதல் நடத்துவார் என உக்ரைனின் மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீதான போரை ஆரம்பித்து ஓராண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், லுஹான்ஸ்க் முதல் டொனெட்ஸ்க் வரையிலும், சபோரிஜியா மற்றும் கெர்சன் முழுவதும் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டு வருவதை செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன என்று உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரான Oleksiy Danilov, இந்த படை குவிப்பின் மூலம் பெப்ரவரி 24ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி புடின் பெரிய தாக்குதல் ஒன்றிற்கு திட்டமிடுகிறார் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எல்லைகளில் படைகள் குவிப்பு
அத்துடன், மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக ஆயுத நன்கொடைகளை வழங்கி வருகின்றது.
இதனால, ரஷ்ய ஜனாதிபதி புடின் வலுவான தாக்குதலுக்கு அஞ்சுவதாகவும் தெரிகிறது, அவை கூட எல்லைகளில் படைகளை குவிக்க காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் புலனாய்வு ஆய்வாளர் பிராடி அஃப்ரிக் தெரிவித்த தகவலின் படி, அவர்கள் அடிப்படையில் தங்கள் ஆதாயங்களை ஒருங்கிணைத்து, இதுவரை அவர்கள் வைத்திருக்கும் பகுதிகளை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
போரில் உக்ரைனுக்கு ஆதரவாக டாங்கிகளை வழங்கிய 12ஆவது நாடாக கனடா உறுதியளித்ததை தொடர்ந்து, நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புடின் போரை நடத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு இராணுவ உதவி
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி நடவடிக்கை சேவையின் பொதுச் செயலாளர் ஸ்டெபானோ சன்னினோ, போர் நடவடிக்கைகள் ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்திற்கு மாறுவதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது.
மாஸ்கோ விரைவில் தங்கள் கவனத்தை மேற்கு நாடுகளுக்கு மாற்றக்கூடும் என்பதை அறிந்த போலந்து, ஸ்பெயின் நோர்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் அனைத்தும் உக்ரைனுக்கு கணிசமான இராணுவ உதவியை வரவிருக்கும் நாட்களில் செய்யும் என்று கூறியமை குறிப்பிடத்தக்கது.