ஈரானை புடின் கைவிடுவார்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தினால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானைப் பாதுகாக்க மாட்டார் என ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் எண்ட்ரி ருடென்கோ எச்சரித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக உச்ச தலைவர் அயதுல்லா காமெனியுடன் லிபியா பாணி தீர்வை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரியுள்ள நிலையிலேயே, ருடென்கோ இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை தொடங்கும் என்று அறிவித்தார்.
அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை
ஆனால், அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துமாக இருந்தால், ஈரானுக்கு உதவ ரஷ்யா கடமைப்படவில்லை என்றே எண்ட்ரி ருடென்கோ தெளிவுபடுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், இவ்வாறான தாக்குதல்கள், பிராந்தியத்திற்கு மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தைகளின் போது, ஈரானுக்கு உதவ தயார் எனவும் ருடென்கோ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |