உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல மாட்டேன்! புடின் வழங்கியுள்ள உறுதிமொழி-செய்திகளின் தொகுப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இருந்து உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல மாட்டேன் என உறுதிமொழி பெற்றதாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.
ஐந்து மணிநேர நேர்காணலில், பல விடயங்களை கூறிய பென்னட், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியைக் கொல்ல விரும்புகிறீர்களா என்று புடினிடம் கேட்டதாகக் கூறியுள்ளார்.
அதற்கு புடின் 100 சதவீதம் நான் ஸெலென்ஸ்கியைக் கொல்ல மாட்டேன் எனகூறியதாக அவர் கூறினார்.
மேலும், இந்த புடினின் உறுதிமொழியை ஸெலென்ஸ்கி அறிந்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, உக்ரைனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவும் புடின் ஒரு நிபுணத்துவ பொய்யர் என்று கருத்து தெரிவித்தார்.
‘கடந்த காலங்களில், புடின் கிரிமியாவை ஆக்கிரமிக்க மாட்டோம், மின்ஸ்க் ஒப்பந்தங்களை மீற மாட்டோம், உக்ரைனை ஆக்கிரமிக்க மாட்டோம் என்று வாக்குறுதிகளை அளித்துள்ளார், இருப்பினும் அவர் இந்த விடயங்களைச் செய்தார். ஏமாறாதீர்கள். ஒவ்வொரு முறையும் அவர் எதையும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்து பின்னர் அவர் அதை செய்வார் என’ கூறியுள்ளார்.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri