மோடியின் அழைப்பின் பேரில் புடின் இந்தியா விஜயம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) அழைப்பின் பேரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என அந்நாட்டின் கிரெம்ளின் மாளிகை(Kremlin - ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம்) செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ரஷ்ய தூதரகத்தின் தகவலின்படி, புடினின் இந்தியா வருகைக்கான திகதிகள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவு செய்யப்படும் என கிரெம்ளின் மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் வருடத்திற்கு ஒரு முறை இது போன்ற கூட்டங்களை நடத்த இரு நாட்டு தலைவர்களும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கிரெம்ளின் மாளிகை
மோடியின் அழைப்பை ரஷ்யா பெற்றுள்ளதாகவும், , நாங்கள் அதை நிச்சயமாக சாதகமாக பரிசீலிப்போம் என கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாடல் கூறியுள்ளார்.
மேலும், கடந்த ஒக்டோபர் - இல் நடைபெற்ற 16ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 23 ஆவது இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு இந்தியா வருமாறு புடினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இரு தலைவர்களும் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பைப் பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |