அணு ஆயுத போர் ஒருபோதும் ஆரம்பித்துவிடக் கூடாது - புடின் எச்சரிக்கை
அணுஆயுதப் போரில் வெற்றியாளர்கள் இருக்க முடியாது என்று எச்சரித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அத்தகைய மோதலை ஒருபோதும் தொடங்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், அணுஆயுதம் குறித்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா முழுமையாக இணங்குகின்றது. அணுசக்தி யுத்தத்தில் வெற்றியாளர்கள் இருக்க முடியாது, அது ஒருபோதும் கட்டவிழ்த்துவிடப்படக்கூடாது என்பதில் இருந்து நாங்கள் தொடர்கிறோம்.
மேலும் உலக சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான மற்றும் பிரிக்க முடியாத பாதுகாப்பிற்காக நாங்கள் நிற்கிறோம்," என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பெப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து அணுசக்தி மோதலின் அபாயம் பற்றிய அச்சர் சர்வதேச நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது.
ரஷ்யாவை கண்டித்துள்ள அணுசக்தி நட்பு நாடுகள்
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தைச் சேர்ந்த நாடுகளின் மாநாட்டின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உலகம் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் அதிர்ஷ்டம் ஒரு உத்தி அல்ல. அணுசக்தி மோதலாக கொதித்துக்கொண்டிருக்கும் புவிசார் அரசியல் பதட்டங்களிலிருந்து இது ஒரு கவசம் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சீனா, ரஷ்யா, பிரித்தானிய, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அணு ஆயுதங்கள் மேலும் பரவுவதையும், அணு ஆயுதப் போரையும் தவிர்க்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் திறக்கப்பட்ட முக்கிய அணுசக்தி ஒப்பந்தத்தின் மதிப்பாய்வாக அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது பற்றிய பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான' பேச்சுக்காக அமெரிக்காவும் அதன் அணுசக்தி நட்பு நாடுகளும் ரஷ்யாவைக் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.