புடினின் மகள்களை குறித்து வைத்துள்ள அமெரிக்கா! - பொருளாதார தடைகள் விதிப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மகள்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த தடைப் பட்டியலில் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குடும்பம் மற்றும் முக்கிய வங்கிகளும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
உக்ரேனில் ரஷ்ய துருப்புக்கள் மேற்கொண்ட அட்டூழியங்களால் தலைநகர் கீவ் அருகே புச்சாவின் வீதிகளில் சிதறிக் கிடக்கும் பொதுமக்களின் உடல்களின் படங்கள் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், எவ்வித ஆதாரமும் இல்லாமல், இந்த படங்கள் கிய்வ் அதிகாரிகளால் அரங்கேற்றப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. புச்சா படுகொலைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், "பெரிய போர்க்குற்றங்களை விட குறைவாக எதுவும் நடக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
"பொறுப்புள்ள நாடுகள் ஒன்றிணைந்து இந்த குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைக்க வேண்டும்" என்று அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புடினின் மகள்களான கேடரினா விளாடிமிரோவ்னா டிகோனோவா மற்றும் மரியா விளாடிமிரோவ்னா வொரொன்ட்சோவா ஆகியோர் "புடினின் வயது வந்த குழந்தைகளாக இருப்பதால் அவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
