ரஷ்யாவை விட்டு தப்பிச்சென்ற புடினின் வளர்ப்பு மகள்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வளர்ப்பு மகளாக பார்க்கப்படும் பிரபல மொடல் அழகி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்கோவில் அமைந்துள்ள அவரது குடியிருப்பை பொலிஸார் சோதனை மேற்கொண்ட நிலையில், அதற்கு சில மணி நேரங்களுககு முன்னர் தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது.
ரஷ்ய தொலைக்காட்சி நட்சத்திரமும் மொடலுமான 40 வயது Ksenia Sobchak விளாடிமிர் புடினுக்கு எதிராக அரசியல் செய்து வருபவர் எனவும், கடந்த 2018 புடினுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள்
மாஸ்கோவின் பாரிஸ் ஹில்டன் என அறியப்படும் இவர், ரஷ்ய அதிகாரிகளிடம் சிக்காமலிருக்க, நடந்தே எல்லையை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெலாரஸ் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களில் குறித்த காட்சிகள் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, பெலாரஸ் எல்லையில் கடவுச்சீட்டு சரிபார்க்கும் அலுவலகத்தில் ஆவணங்களை ஒப்படைத்துள்ளதாகவும் Ksenia Sobchak ரஷ்யாவில் இருந்து தப்பியுள்ளதாக புடின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, வியாழக்கிழமை அவர் லிதுவேனியா நாட்டில் நுழைந்துள்ளதாகவும், குறித்த தகவலை அரசாங்கமே உறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.