புடினை நெருங்கிய எதிரிகள் - எது வேண்டுமானாலும் நடக்கலாம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான அதிகாரியின் மகள் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில், புடினின் நெருக்கமான வட்டாரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு மூளையாக செயல்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரின் மகள் 30 வயதான தர்யா டுகினா என்பவர் மாஸ்கோவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விளாடிமிர் புடின் அரசாங்கத்தை வெளியேற்றத் துடிக்கும் அமைப்புகள் மீது சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது.
டுகின் மீது வைக்கப்பட்ட இலக்கு
அத்துடன், உக்ரைன் விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட அலெக்சாண்டர் டுகின் மீது வைக்கப்பட்ட இலக்கு எனவும், ஆனால் அவர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கடைசி நொடியில், தமது வாகனத்தை மாற்றிக்கொண்டதால், அலெக்சாண்டர் டுகின் உயிர் தப்பியுள்ளார். இந்த நிலையில் தர்யா டுகினா படுகொலை செய்யப்பட்டது ரஷ்ய அதிகார மையத்தை நடுங்க வைத்துள்ளது.
விளாடிமிர் புடினை எதிரிகள் நெருங்கி விட்டார்கள் எனவும், இனி கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.