புடினுக்கு பேரிடி! 24 மணி நேரத்தில் ரஷ்யாவை நிலைகுலைய செய்த உக்ரைன்
ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை மீது,24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக பாரிய தாக்குதலை உக்ரைன் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடல் ட்ரோன்களால் ஊடாக ரஷ்யா மற்றும் சிரியாவுக்கு இடையே வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற,4,754 டன் ரஷ்ய டேங்கர் கப்பல் மீதே குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் 463 அடி நீளம் கொண்ட அந்த எண்ணெய் மற்றும் இரசாயன டேங்கர் கப்பலானது மூழ்கும் அபாயத்தில் காணப்பட்டுள்ளதுடன் கப்பல் என்ஜின் அறை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என கப்பல் ஊழியர்கள் முறையிட்டுள்ளனர்.
கப்பலுக்கு தடை
இதேவேளை கட்டுப்பாட்டு அறை பகுதியளவில் சேதமடைந்ததால், 11 பேர் கொண்ட குழுவினர் கண்ணாடி உடைந்து சிராய்ப்புகளால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைன் கடற்படையின் ஒருங்கிணைப்புடன் 450 கிலோ TNT வெடிமருந்தை பயன்படுத்தி, தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
2019ல் இருந்தே சிரியா விவகாரம் தொடர்பில் சர்வதேச கடற்பகுதியில் இந்த கப்பலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |