அம்பலமானது உக்ரைனின் புதிய திட்டம்: ரஷ்யாவில் பரபரப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சிவப்புக் கோடுகளில் ஒன்றைக் கடக்கும் தவிர்க்க முடியாத அச்சுறுத்தல் ஒன்று ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய உச்சகட்ட பாதுகாப்பு கொண்ட விளாடிமிர் புடினின் மாஸ்கோ அரண் தாக்குதலுக்கு இலக்காகும் வாய்ப்புகள் அதிகரித்துவருவதாக ரஷ்யாவின் மூத்த அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ மீதான தாக்குதல் உறுதி
ரஷ்யாவின் முன்னாள் துணை வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ஃபெடோரோவ் என்பவரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“மாஸ்கோ மீதான தாக்குதல் உறுதி.அது முயற்சியல்ல திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்கும்.
அது விளாடிமிர் புடினின் சிவப்புக் கோட்டினை கடக்கும் செயல்.தமது முதன்மை நகரங்களை காக்க புடினால் முடியாமல் போகும்.
முழு அளவிலான உலகப் போர்
உக்ரைன் மீதான தனது படையெடுப்பை முழு அளவிலான உலகப் போராக மாற்றுவதற்கும் புடின் திட்டமிட்டு வருவதாக அவர் சந்தேகம் உள்ளது.
உக்ரைனுக்கு அனுப்பிய வீரர்களில் சரிபாதி அளவுக்கு ரஷ்யா இழந்துள்ளதுடன், உக்ரைன் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 400,000 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.இவர்களால் இனி போரிட முடியாது.”என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யாவின் படையெடுப்பினை, உக்ரைன் இதுவரை தடுப்பாட்டத்தால் தான் எதிர்கொண்டு வந்துள்ளது.
மேலும், ரஷ்ய தாக்குதல் வியூகங்களை விடவும் உக்ரைனின் தந்திரங்கள் மெச்சும்படியாக இருந்தது என போர் தொடர்பான நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.