உக்ரைனில் 2 நாட்கள் போர் நிறுத்தம்: புடின் அதிரடி அறிவிப்பு
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தனது இராணுவ நடவடிக்கையை தொடங்கியது.
ரஷ்யா தொடுத்த இந்த போர் 10 மாதங்களை கடக்கின்றது. இந்த நிலையில், உக்ரைனில் இரண்டு நாள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
ஆர்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகை
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளிலும் கொண்டாடப்படும் ஆர்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக போர் நிறுத்தம் தற்காலிகமாக 2 நாட்கள் நடைமுறைப்பத்தப்படுவதாக புடின் அறிவித்துள்ளார்.

ஜனவரி 6 மற்றும் 7 திகதிகளில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் அன்று உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்தை கடைபிடிக்குமாறு தனது படைகளுக்கு புடின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யாவின் ஆன்மீகத் தலைவர், தேசபக்தர் கிரில் மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் 10 மாத மோதலில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய பிறகு ரஷ்யா சண்டை நிறுத்தம் செய்ய இருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 24 நிமிடங்கள் முன்
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri