உக்ரைனியர்களுக்கு பணம் செலுத்த புடின் உத்தரவு
உக்ரைனில் இருந்து வெளியேறிய மக்கள் நாட்டிற்கு வருவதற்கான நிதி சலுகைகளை அறிமுகப்படுத்தும் ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி, ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் நன்மைத் தொகையைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 18 முதல் உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுக்கு 10,000 ரூபிள் (சுமார் £ 140) மாதாந்திர ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று அரசாங்க வெளியிடப்பட்ட ஆணை தெரிவிக்கப்பட்டுள்ளது.
10,000 ரூபிள் வழங்குமாறு புடின் உத்தரவு
மாற்றுத்திறனாளிகளும் அதே மாதாந்திர உதவிக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள் எனவும், அதே நேரத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு முறை பலன் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் குடிமக்களுக்கும், டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகளுக்கும் பணம் செலுத்தப்படும் என்று ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனில் இருந்து பிரிந்த இரண்டு ரஷ்ய ஆதரவு நிறுவனங்களான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கை மாஸ்கோ பிப்ரவரியில் சுதந்திர நாடாக அங்கீகரித்திருந்தது.
டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் இருந்து ரஷ்யா வந்த ஒவ்வொரு நபருக்கும் 10,000 ரூபிள் வழங்குமாறு புடின் முன்பு உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.