ரஷ்யா விட்ட தவறு! ஆண்டுகளுக்கு பின்னர் வருத்தம் வெளியிட்ட புடின்
ரஷ்யா தனது உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை தகுந்த ஆயத்தங்களுடன் முன்னதாகவே ஆரம்பித்திருக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இன்று (19.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான படையெடுப்பை தொடங்குவதற்கு முன்னர் முறையான திட்டமிடலை ரஷ்யா மேற்கொண்டிருக்க வேண்டும் என புடின் இதன்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு
ரஷ்யா 2014இல் கிரிமியாவை உக்ரைனிலிருந்து கைப்பற்றிய நேரத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவான படைகள் உக்ரைனில் மோதலை ஆரம்பித்திருந்தன.

எனினும், 8 ஆண்டுகள் கடந்த பின்னரே உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை புடின் தொடங்கியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில், தற்போது போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சமாதான உடன்படிக்கைக்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan