கூகுள் மெப் உதவியுடன் பல மாதங்களுக்கு பின்னர் பிடிபட்ட கொலையாளி
ஸ்பெயினில் கடந்த ஆண்டு இடம்பெற்ற கொடூரமான கொலை ஒன்றின் குற்றவாளி, கூகுள் மெப்பின் ஸ்ட்ரீட் வியூவ்(Google Street View) படங்களின் மூலம் கண்டுபுடிக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயினின் வடக்கில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் வசிக்கும் 32 வயதான ஜோர்ஜ் லூயிஸ் பெரெஷ்(Jorge Luis Perez) என்பவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்பானிய பொலிஸார் பல மாதங்களாக விசாரணைகளை நடத்தி வந்துள்ளனர்.
கொலையாளி கைது
இந்நிலையில், இந்த கொலைக்கான முக்கிய ஆதாரம் கூகுள் மெப்பின் ஸ்ட்ரீட் வியூவ் படங்களின் மூலம் கிடைத்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நபர் வசிக்கும் கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தில், குற்றவாளியாக கருதப்படும் நபர் தனது காரின் பின்னால் ஒரு பொருளை ஏற்றுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பொருள் பெரெஷின் கொலை செய்யப்பட்ட உடல் என கண்டுபிடித்த பொலிஸார், கொலையாளியை கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |