அணு ஆயுத போருக்கு தயாரான ரஷ்யா! - முழு குடும்பத்தையும் பதுங்கு குழிக்கு அனுப்பிய புடின் (Video)
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சைபீரியாவில் உள்ள ஒரு 'நிலத்தடி நகரத்தில்' தனது குடும்ப உறுப்பினர்களை மறைத்து வைத்துள்ளார் என்று ரஷ்ய பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆடம்பரமான இந்த ஹைடெக் பதுங்கு குழி சைபீரியாவில் அல்தாய் மலைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 61 வயதான வலேரி சோலோவி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
இணைய வசதிகள் மட்டுமின்றி, சுகமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும் இதில் இருப்பதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
விளாடிமிர் புடின் தனது குடும்ப உறுப்பினர்களை அணு ஆயுதப் போரில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இரகசிய சைபீரிய நிலத்தடி பதுங்கு குழிக்கு மாற்றியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், பதில் தாக்குதலில் பல ஆயிரக்கணக்கான ரஷ்ய படையினர் உயிரிழந்தனர். இதனால் உக்ரைனுக்கு எதிராக புடின் ஒரு கொடூரமான போரை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.