டெல்லியில் சந்தித்து கொண்ட புடினும் மோடியும்..
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான சந்திப்பானது, நேற்றைய தினம் புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.
23வது இந்தியா-ரஷ்யா வருடாந்த உச்சிமாநாட்டிற்காக இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக புடின் புது டில்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
புடினின் இந்த இரண்டு-நாள் பயணத்தில், புடின் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
உச்சிமாநாடு
இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய - ரஷ்ய இடையே பல முக்கிய பொருளாதார கொடுக்கல் வாங்கலுடனான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யும் எண்ணெயும் முக்கிய பங்காற்றுகின்றது.
எனவே, புடினின் விஜயத்தின் போது, பொருளாதார மற்றும் முக்கிய இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


