புடினிற்கு எதிராக ரஷ்ய தளபதிகளின் பயங்கர திட்டம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை இரகசியமாகக் கொலை செய்துவிட்டு, அவருக்கு
மாரடைப்பு என செய்தி பரப்ப ரஷ்ய தளபதிகள் திட்டமிட்டு வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய தளபதிகளின் திட்டம்
உக்ரைன் போரில் தடுமாறும் புடின் மீது கடுமையான கோபத்தில் இருக்கும் ரஷ்ய தளபதிகள், அவரை கொல்லத் திட்டமிட்டுள்ளார்கள் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே புடினுடைய உடல் நிலை மோசமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு புடினுடைய பாதுகாப்பு அதிகாரிகளே அவரை இரகசியமாக கொன்றுவிட்டு, புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறி உண்மையை மறைத்துவிட திட்டமிட்டு வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புடினைக் கொன்றுவிட்டு அவரை விட கடுமையான ஒருவரைத் தலைவராக்கி உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு மீண்டும் ரஷ்யப் படைகள் அனுப்பப்படலாம் என பாதுகாப்பு நிபுணரான ரோபட் டோர்டோன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புடின் டான்பாஸ் பகுதியில் மட்டும் கவனம் செலுத்தி வருவது அவர்களுக்கு பிடிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைக்கப்பட்ட உண்மைகள்
ஏற்கனவே 1970களில், ரஷ்ய தளபதிகள் இதேபோன்று லியோனிட் ப்ரெஷ்நேவ் என்னும் முன்னாள் சோவியத் யூனியன் தலைவரையும், வேறு சில கம்யூனிஸ்ட் தலைவர்களையும் கொலை செய்துவிட்டு மாரடைப்பு என்று கூறியிருக்கிறார்கள் என தகவல் வெளியிப்பட்டுள்ளது.