போரின் 100வது நாள்! ரஷ்யர்களை புறமுதுகிடச் செய்த உக்ரைன்
முக்கிய இடத்தை மீட்ட உக்ரைன்
உக்ரைன் கிழக்கு பகுதியில், தமது படைகள் செவெரோடோனெட்ஸ்க் நகரின் ஒரு பகுதியை மீண்டும் கைப்பற்றியதாக அந்த நகரத்தின் ஆளுநர் அறிவித்துள்ளார்.
உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்டு 100வது நாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செவரோடோனெட்ஸ்கில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது கடினமாக உள்ளது என்று பிபிசி தெரிவித்துள்ளது.
புறமுதுகிடச் செய்த உக்ரைன்
எனினும் தனது படைகள் படையெடுப்பு ரஷ்யப் படைகளை புறமுதுகிடச் செய்துள்ளதாக உக்ரைன் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பழைய தொழில்துறை நகரத்தின் 70 சதவீதத்தை ரஷ்யர்கள் முன்னர் முழுமையாக ஆக்கிரமித்திருந்தனர்.
இந்தநிலையில் குறிப்பிடத்தக்க பகுதிகளை தமது படையினர் மீட்டெடுத்ததாக ஆளுநர் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் முக்கிய இலக்கான இந்த நகரம் பல வாரங்களாக தொடர்ந்து எறிகனைத் தாக்குதலுக்கு உள்ளாகி வந்தது.
அமெரிக்க பீரங்கிகளின் வருகை இதற்கான காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தனது நேற்றைய இரவு உரையில் ரஷ்யாவின் இராணுவத்தை கேலிக்கு உட்படுத்தினார்.
ஒரு காலத்தில் உலகின் இரண்டாவது இராணுவமாக கருதப்பட்ட ரஷ்ய இராணுவத்திடம் தற்போது என்ன மிச்சம் இருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.